பராஷா பின்காஸ்(கருமையான தோல்): கடவுளை மதிப்பதில் உள்ள வெகுமதிகள்

பின்காஸ் (கருமையான தோல்) פִּינְחָס

எண்ணாகமம் 25:10–29:40;30:1; எரேமியா1:1-2:3; 1 பேதுரு 3:8-4:19

பராஷா பெயர் 41 பின்காஸ், פִּינְחָס

கடந்த வார பராஷா (பாலாக்) பின்காஸ் என்ற மனிதருடன் இஸ்ரயேல் மீது வந்து ஏற்கனவே 24,000 இஸ்ரயேலியர்களைக் கொன்ற பேரழிவுகரமான கொள்ளை நோய்யை முடிவுக்குக் கொண்டுவந்தார். இஸ்ரயேலியர்கள் மிட்யானிய பெண்களுடன் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதால் இந்த நோய் ஏற்பட்டது.

பின்காஸ் (அஹரோனின் பேரன்) ஒரு சிமியோனிய தலைவரான இஸ்ரயேலிய ஸிம்ரீயைக் கொன்றபோது இறந்தவர்களின் எண்ணிக்கை முடிவடைந்தது.

பின்காஸ் அவர்கள் கூடாரத்துக்குள் நுழைந்து அவர்கள் இருவரின் வழியாகவும் ஒரு ஈட்டியை பாய்ச்சினார்.

கடவுள் தனக்காக வைராக்கியத்தை மதிக்கிறார்

இந்த வார பராஷாவில், பின்காஸின் நடவடிக்கை கொள்ளை நோய்யை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் தனது மக்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர் கடவுளிடமிருந்து தனக்கு ஒரு பெரிய வெகுமதியையும் பெறுகிறார்.

எண்ணாகமம் 25:12-13

இதுபோன்ற வன்முறைச் செயலும் கடவுளோடு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தக்கூடும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, ஆனால் அதுதான் நடந்தது.

பின்காஸிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுள் வன்முறையை மதிக்கிறார் என்பதா? நிச்சயமாக இல்லை. ஆனால் அவர் எதை மதிக்கிறார்?

கடவுள் தனக்கான வைராக்கியத்தை மதிக்கிறார்.

பின்காஸ் ரபிமார்களால் எலியாவுடன் ஒப்பிடப்பட்டுள்ளார், அவர் தேவபக்தியுடனும், இறைவனுக்கான ஆர்வத்துடனும் நடந்தார். யாவே தான் கடவுள் என்பதை நிரூபிக்க அவர் கார்மல் மலையில் ‘பாஅல்’லின் பொய்யான தீர்க்கதரிசிகளை தைரியமாக எதிர்கொண்டார்.

எலியாவின் வைராக்கியத்தை கடவுள் கவுரவித்தார்.

மல்கியா 4:5

கடவுள் அவரை மதிக்கிறவர்களை மதிக்கிறார்

இந்த கொள்ளை நோய் பேரழிவுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டார். இது இரண்டாவது முறை; ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக எடுக்கப்பட்டது.

ஓநாய்களின் தாக்குதலால் மந்தைகள் குறைந்துவிட்ட நிலையில் ஒரு மேய்ப்பனைப் போல, பேரழிவு முடிந்ததும், மேய்ப்பன் தனது ஆடுகளை அன்பாக எண்ணி எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த. (ராஷியின் வர்ணனை).

அதேபோல், ஒவ்வொரு பழங்குடியினரும் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்குள் நுழைந்தவுடன் அவர்களின் நியாயமான பரம்பரை உடைமை பெற கணக்கெடுப்பு உதவும்.

கடவுளின் கோபம் தங்கள் மூதாதையர்களை அழித்திருந்தாலும் சில குலங்கள் தப்பிப்பிழைத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்தது உதாரணமாக, மோஷேக்கு எதிராக 250 தலைவர்களின் கிளர்ச்சியை வழிநடத்திய லேவியரான கோரக்கின் மூதாதையர்கள், ஆசாரியத்துவத்தை கைப்பற்ற முயன்றனர்.

கோராக், அவருடைய வீடு மற்றும் அவருடன் இருந்தவர்கள் பூகம்பத்தாலும் நெருப்பினாலும் நுகரப்பட்டனர், ஆனால் “கோராக்கின் புத்திரர் இறக்கவில்லை” என்று வேதம் கூறுகிறது. (எண்ணாகமம் 26:11; எண்ணாகமம் 16:32 ஐயும் காண்க)

இந்த மகன்கள் சங்கீதக்காரர்களின் ஒரு குழுவின் நிறுவனர்களாக ஆனார்கள், அதன் எழுத்துக்கள் இன்றும் நம்மிடம் உள்ளன, சங்கீதம் (தெஹில்லீம்) புத்தகத்தின் ஒரு பகுதியை நிரப்புகின்றன. சங்கீதம் 42, 44-49, 84-85, 87-88 இந்த மகன்களால் எழுதப்பட்டவை என்று பொதுவாக நம்பப்படுகிறது.

அவர்களின் பாராட்டுக்கள் எழுதப்பட்டவை மட்டுமல்ல, நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளப்பட்டன. போருக்கான ஆயத்தமாக, அவர்கள் “எழுந்து நின்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மிகவும் உரத்த குரலில் புகழ்ந்தார்கள்.” (2 நாளாகமம் 20:19)

எங்கள் இரத்த ஓட்டத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற நாங்கள் விதிக்கப்படவில்லை. கடவுளின் பக்தியுள்ள பின்பற்றுபவர்களாக மாறுவதற்கு, நம்முடைய பின்னணியை விட, நம்முடைய சொந்த பெற்றோரின் பாவம் அல்லது கிளர்ச்சியைக் காட்டிலும் உயர நாம் தேர்வு செய்யலாம்.

கடவுள் ஒரு மரபுரிமையுடன் பெண்களை மதிக்கிறார்

மோஷே தேசத்தைப் பிரிக்கத் தயாரானபோது, ​​ஸெலாப்காட்டின் மகள்கள் தங்கள் தந்தை மகன்கள் இல்லாமல் இறந்துவிட்டதால், அவர்களுடைய பரம்பரை உடைமையைக் கேட்டார்கள். கடவுள் ஆண்களையும் பெண்களையும் சமமாக நேசிக்கிறார், ஆகவே, மகள்களுக்கு அவர்களின் தந்தையின் நிலத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கினார்.

பெண்கள் – ஒற்றைப் பெண்கள் கூட- தங்களுடையதை சரியாகப் பெறலாம்.

ஆன்மீக ரீதியில், கர்த்தர் நம்முடைய பங்காகும் – அவர் நீதியின் கடவுள், நாம் தைரியமாக அதைக் கேட்டு, அதற்கு நாம் தகுதியானவர்கள் என்று நம்பினால் நம்முடைய உடைமையை நமக்குத் தருவார்.

​​ஸெலாப்காட்டின் மகள்கள் தாங்கள் தகுதியானவர்கள் என்று நினைக்கவில்லை என்றால் – அல்லது பரம்பரை உடைமை பெற்ற மற்றவர்கள் ஆண்கள் என்பதால், அவர்கள் கூட கேட்கக்கூடாது என்று நினைத்திருந்தால்? அவர்கள் நிலத்தில் இருந்த தங்கள் பங்கை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.

நாம் பயப்படாமல் இருக்க வேண்டும், அது போல் நாம் விரும்புவதை கேட்க கடவுளின் அழைப்பை நிறைவேற்றுவதில் தைரியமாக இருக்கவும், அதை அவருடைய வழியிலும், அவருடைய நேரத்திலும் அது நிறைவேறுவதற்காகவும் அவரை நம்ப வேண்டும்.

நாம் கேட்காவிட்டால் அது அவருடைய விருப்பமா என்று நமக்குத் தெரியாது. நாம் விரும்புவதை அவருடைய பெயரில் கேட்கும்படி இயேசு (இயேசு) நம்மை அழைக்கிறார்: “இப்போது வரை நீங்கள் என் பெயரில் எதுவும் கேட்கவில்லை. உங்கள் சந்தோஷம் நிறைந்திருக்கும்படி கேளுங்கள், பெறுவீர்கள். ” (யோவான் 16:24)

நம்மைப் பற்றிய தொடர்பான தேவைகள்  சிறிதோ, பெரிதோ என்று கடவுள் கவலைப்படுவதில்லை என்பதை இந்த பெண்களின் வேண்டுகோளுக்கு கடவுளின் செயலிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்,

அவர் ஒட்டுமொத்தமாக இஸ்ரயேல் தேசத்துக்காக மட்டுமல்லாமல், அவருடைய ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் அக்கறை காட்டுகிறார்: “அவர் தன்னைப் பயப்படுபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.” (சங்கீதம் 145:19)

தனது கடைசி நாட்களில், மோஷேக்கும் ஒரு ஆசை இருந்தது தன் ஆடுகளுக்கு ஒரு புதிய மேய்ப்பனை நியமிக்கும்படி கர்த்தரிடம் கேட்டார்.

கடவுள் தெய்வீக தலைமைத்துவத்தை மதிக்கிறார்

எண்ணாகமம் 27:18-20

திருமறையின் இந்த பகுதியில், மோஷேக்கு பேரழிவு தரும் அடியாக இருந்திருக்க கூடிய செய்தியை கடவுள் வழங்கினார். வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தைக் காண அவர் அனுமதிக்கப்படுவார் என்றாலும், அவர் ஒருபோதும் நுழைய அனுமதிக்க மாட்டார் என்று அவருக்குக் கூறப்பட்டது. எண்ணாகமம் 27:12-14

ஆனாலும் மோஷே மந்தையின் மீது அக்கறை காட்டினார், அவர் அவர்களை கானான் தேசத்திற்குள் அழைத்துச் செல்ல மாட்டார் என்று தெரிந்தபோதும்; அவர் சபைக்கு ஒரு மனிதனை நியமிக்கும்படி இறைவனிடம் கேட்டார்.

கைகளை வைப்பதன் மூலம் மோஷேயின் தலைமைத்துவ அதிகாரத்தை யோசுவாவுக்கு (இயெஹோஷுவ) மாற்றும்படி கடவுள் கேட்டார். அதிகாரத்தின் பரிமாற்றத்தைக் குறிக்கும் உடல் செயல்பாடு இது.

Lay என்கிற ஆங்கிலச் சொல் எபிரேய மொழியில், samak / סָמַךְ / சாமக் ஆகும், இதிலிருந்து வந்தது Semichah / סְמִיכָ / சமீகாஹ் என்ற பெயர்ச்சொல். இந்த சொல்லே Rabbinic Ordination – ரபிகள் அருட்பொழிவு பெறும் நிகழ்வுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குழுவினரின் தலைமைத்துவத்திற்காக அபிஷேகம் செய்யப்படுவது ஒரு புனிதமான நம்பிக்கையாகும், அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

நாம் அனைவருக்கும் தெய்வீக தலைமை தேவை; நாம் நிர்வகிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டோம். ஒரு மேய்ப்பன் இல்லாமல், நாம் சிதறடிக்கப்பட்டு உதவியற்ற ஆடுகளாக இருக்கிறோம், எல்லா பக்கங்களிலும் தாக்குதலுக்கு ஆளாகிறோம்.

கடவுள் தான் இறுதி அதிகாரம், மற்றும் இயேசு நம்முடைய பெரிய மேய்ப்பர் என்றாலும், மோஷேயின் மற்றும் யோசுவாவின் தலைமையைப் போலவே, அவருடனான நமது நடைப்பயணத்தில் நமக்கு வழிகாட்டவும் ஆதரவளிக்கவும் அவர் தலைவர்களை நியமிப்பார்.

இஸ்ரயேல் மக்களை தங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வதற்காக மோஷே யோசுவாவை அபிஷேகம் செய்தார்.

தம்மைப் பின்பற்றுபவர்களை வாக்குப்பண்ணப்பட்ட மேசியானிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்ல கடவுள் இயேஷூவாவை (இயெஹோஷுவவின் சுருக்கப்பட்ட வடிவம்) அபிஷேகம் செய்தார்.

இந்த கடைசி நாட்களில் தெய்வீக ஞானத்துடனும் நேர்மையுடனும் நம்மை ஆளும்படி நம் தேசங்களின் தலைவர்களுக்காகவும் குறிப்பாக இஸ்ரயேலின் தலைமைக்காகவும் ஜெபிப்போம். இயேஷூவா ஹமாஷியாக் (இயேசு மேசியா) திரும்புவதற்காக ஜெபிப்போம்.

கடவுள் இஸ்ரயேலை கனப்படுத்துகிறார்

யூத நாட்காட்டியில் (ஜூலை 4 மற்றும் ஜூலை 25) டம்மூஸின் 17ஆம் தேதிக்கும் ஆவ் மாதத்தின் 9 ஆம் தேதிக்கும் இடையில், யூத மக்கள் இடைநிறுத்தப்பட்டு மூன்று வார கால அவகாசத்தில், தமது வரலாறு முழுவதும் ஏன் இவ்வளவு துயரங்கள் தம்மீது வந்துள்ளன என்பதை சிந்திக்கின்றனர்.

நம்முடைய சொந்த நடத்தை, அணுகுமுறைகள் மற்றும் கடவுளுடனான உறவு ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று வாரங்களில் வரும் ஒவ்வொரு ஷப்பாத்திலும், ஹஃப்டாரா அறிவுரைகள் என்று அழைக்கப்படும் சிறப்பு தீர்க்கதரிசன பகுதிகளை நாம் படிக்கிறோம், அவை நமது தவறான அமைதி உணர்வைத் நிச்சயம் தொந்தரவு செய்யும்.

உண்மையில், அறிவுரை என மொழிபெயர்க்கப்பட்ட சொல்லின் – “d’ puranuta”, பொருள் ‘தொந்தரவு’ செய்வதாகும்.

 இந்த வாரத்தின் ஹஃப்டாராவில் (எரேமியா 1:1–2:3), இஸ்ரயேல் புனித (கடோஷ்) என ஒதுக்கப்பட்ட முதல் பழங்களுடன் ஒப்பிடப்படுகிறது, இது கர்த்தருக்கு வழங்கப்படும்.

எரேமியா 2:3

இஸ்ரயேலை அழிக்க முற்படும் எந்தவொரு நபரையும், தேசத்தையும், சக்தியையும் கடவுள் எதிர்க்கிறார் என்பது தெளிவாகிறது.

இன்றும், வரலாறு முழுவதிலும், யுத்தம் மற்றும் போர்க்குற்றங்கள், இரத்த அவதூறு, மனிதாபிமான முற்றுகைகள் மற்றும் நிறவெறி ஆகியவற்றின் மூலம் அவதூறான தாக்குதல்கள் மூலம் இஸ்ரயேல் – கடவுளின் புனித பூமி அழிக்கப்படுவதைக் காண பல ‘சக்திகளுக்கு’ நிச்சயமாக ஆசை உள்ளது.

இருப்பினும், சீயோனிலிருந்து வெளிவரும் வார்த்தை இதுதான்: இஸ்ரயேலைத் தாக்க முற்படுபவர்கள் இன்னும் பெரிய தீமை தங்கள் மீது வருவதற்கு முன் தாக்குதல்களை நிறுத்தி, விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எரேமியா 30:11

கடவுள் சத்தியத்தை செயலில் மதிக்கிறார்

கடவுளின் திட்டத்தில் நம் பணியை நிறைவேற்ற நாம் மிகவும் பலவீனமானவர்கள் அல்லது மிகவும் பயந்தவர்கள் அல்லது மிகவும் இளையவர்கள் அல்லது வயதானவர்கள் என்று நாம் கருதக்கூடாது. கடவுள் அதில் இருந்தால், அவர் தம்முடைய சித்தத்தைச் செய்ய வலிமை, அருள், ஞானம், தைரியம் ஆகியவற்றைக் கொடுப்பார்.

உதாரணமாக, பின்காஸ் இன்னும் சமூகத்தில் ஒரு பெரியவராக இருக்கவில்லை, ஆனாலும் அவர் மட்டுமே தனது சொந்த மக்களை அழிக்கும் பாவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.

மற்றவர்கள் ஸிம்ரீயின் வெளிப்படையான பாவத்தைக் கண்டார்கள், ஆனால் அவர்கள் வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை (மோஷே, அஹரோன் மற்றும் அவருடைய மகன்கள் கூட).

பாவிகளின் அல்லது நம் எதிரிகளின் முதுகில் ஈட்டிகளுடன் பதிலளிக்க கடவுள் அழைக்கவில்லை என்றாலும், நாம் அமைதியாகவும் செயலற்றவர்களாகவும் இருக்கக்கூடாது.

சில சமயங்களில் கடவுள் சில சூழ்நிலைகளில் உண்மையை பேசுவது அல்லது எழுதுவது, வாழ்வு குறித்து பேசுவதன் மூலம் ஒரு பிரச்சினையை சரிசெய்ய உதவுகிறார். சத்தியத்தால் நிரப்பப்பட்ட வாழ்க்கை பொய்கள் என்னும் பாவத்திற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்.

அதேபோல், தைரியமாக உண்மையைப் பேசுபவர்களுக்கு மேல் ஆசீர்வாதங்களையும், வாழ்வளிக்கும் சொற்களை பேசுவது அவர்களுக்கு அதற்கு முன்பு வரை இல்லாத அபிஷேகத்தையும் சக்தியையும் கொண்டு வரக்கூடும். அது அவர்களை வலிமையுடன் கட்டியெழுப்புகிறது மற்றும் நீதிக்காக நிற்கும் அனைவருக்கும் வரும் கடும்புயலில் விடாமுயற்சியுடன் இருக்க உதவுகிறது.

1 பேதுரு 3:14–15,17

இஸ்ரயேலைப் பற்றிய உண்மையைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், இயேஷூவா ஹமாஷியாக் (இயேசு மேசியா) யார் என்று அவரைப் பற்றி இன்னும் அறியாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நித்திய வாழ்வளிக்கும் உண்மையை நாம் உறுதிப்படுத்தலாம்.

1 பேதுரு 3:15-16

Prev
Next