குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

Sukkotסֻכּוֹת – சுக்கோத்

எபிரேய மொழியில் சுக்கோத் என்றால் கூடாரம். ஆங்கிலத்தில் நாம் Tabernacle என்று வாசிக்கிறோம்.

யூத நாட்காட்டியின் ஏழாவது மாதமான Tishrei / תִּשְׁרֵי / டிஷ்ரேய் மாதம் 15ம் தேதி இப்பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று செப்டம்பர் 23 மாலை தொடங்கி செப்டம்பர் 30 மாலை முடிய கொண்டாடப்படுகிறது.

Torah / תּוֹרָה டோராவின்படி இப்பண்டிகையானது ஏழு நாட்கள் மட்டுமே. இஸ்ரயேலில் இப்பண்டிகையானது எட்டு நாட்களும், உலகம் முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த யூதர்களால் ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.

எட்டாம் நாள் – ஷெமினி அட்ஸ்சேரேட் / שְׁמִינִי עֲצֶרֶת / Shemini Atzeret அந்த ஆண்டு டோரா / תּוֹרָה / Torah  வாசிப்பை நிறைவு செய்து கொண்டாடப்படுகிறது.

ஒன்பதாம் நாள் – சிம்ஹத் டோரா / שִׂמְחַת תּוֹרָה / Simchat Torah என்று புதிய ஆண்டில் டோரா வாசிப்பை தொடங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.

இஸ்ரயேலில் சுக்கோத் பண்டிகையின் தொடர்ச்சியாக எட்டாம் நாளன்று ஷெமினி அட்ஸ்சேரேட் மற்றும் சிம்ஹத் டோரா கொண்டாடப்படுகிறது.

நாம் லேவியராகமம் 23:33ல் சுக்கோத் குறித்து, கர்த்தர், மோஷேயிடம் / מֹשֶׁה / Moses பேசுவதை நாம் வாசிக்கிறோம்.

கர்த்தர் நிறுவிய ஏழு பண்டிகைகளில் இதுவே இறுதியானது.

ஷாலோஷ் ரெகாலீம் /  Shalosh Regalim /  שלוש רגלים

இதன் பொருள் பின் வருமாறு ஷாலோஷ் என்றால் மூன்று ரெகாலீம் என்றால் கால்நடை அதாவது அன்றைய நாட்களில் இஸ்ரயேல் மக்கள் வேதாகமத்தின்படி ירושלים / Yerushalayim / எருஷலாயீமுக்கு மேற்கொள்ளும் மூன்று புனித பயணங்களில் ஒன்று இப்பண்டிகை சமயமாகும். மீதம் இரு சமயங்கள் பெசாஹ் பண்டிகை மற்றும் ஷவுஓட் பண்டிகை ஆகும்.

இப்பண்டிகை சமயம் யூத மக்கள் தாம் கண்ட விளைச்சலில் இருந்து பழங்கள் மற்றும் இலைகள் கொண்டு தற்காலிக கூடாரம் அமைத்து ஏழு நாட்களும் அதில் உண்டு உறங்கி மகிழ்வர்.

இதன் முதற் பொருள் என்னவென்றால், இஸ்ரயேல் மக்கள் எகிப்து அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று, நாற்பது வருட வனாந்தர பயணத்தில் எளிதில் முறிகிற இருப்பிடம் அமைத்து வாழ்ந்த நாட்களை நினைவு கொள்வது.

மற்றொரு பொருள், இக்கூடாரமானது திருமணப் பந்தலைக் குறிக்கிறது. அன்றைய நாட்களில் திருமண நிகழ்வுகள் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் என்பதை நாம் கவனித்தால் சுக்கோத் ஒரு திருமணமே.

நாம் நம்முடைய புருஷரான கர்த்தரோடு இணைந்து, மகிழ்ந்து, வாசம் செய்யவிருக்கும் காலத்தை நினைவூட்டும் பண்டிகை இது.

வழக்கங்கள்:

அர்பா மினிம் / אַרְבַּע מִינִים / Arba Minim –

முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.லேவியராகமம் 23:40

இங்கு குறிக்கப்பட்டுள்ள நான்கு (அர்பா / אַרְבַּע) வகை (மினிம் / מִינִים) இனங்களின் சரியான எபிரேயப் பதங்கள் மற்றும் ஆங்கிலம் / தமிழ் இணைச் சொற்கள் இதுவே.

  1. எத்ரோக் / אֶתְרוֺג / Etrog – Citrus / எலுமிச்சை இனம்
  2. லுலாவ் / לוּלָב / Lulav – Date Palm / பேரீச்சம்  இனம்
  3. ஹடஸ் / הֲדַס / Hadas – Myrtle / நறுமண மலர்ச்செடிஇனம்
  4. அராவாஹ் / עֲרָבָה / Aravah – Willow / அலரி இனம்

இவற்றை மொத்தமாக “லுலாவ் – எத்ரோக்” என்பர். இதில் எத்ரோக் மட்டும் பழமாக இடக்கையில் வைத்துக்கொண்டு மீதி மூன்றின் ஓலைகளை வலது கையில் பிடித்துக்கொண்டு “ஓசன்னா!” என்று சொல்லி பலிபீடத்தின் முன்பு ஆர்ப்பரிப்பார்கள்.

இந்த நிகழ்வையே நம் ஆண்டவர் இயெஷூவா ஹமஷியாஹ் / ‎הַמָּשִׁיה ‎ יֵשׁוּע / Jesus The Messiah, ירושלים / Yerushalayim எருஷலாயீம் நகரத்திற்கு பெசாஹ் / פֶּסַח / Pesach (Passover) பண்டிகை சமயம் வெற்றி ஊர்வலம் வந்த சம்பவமாக நாம் மத்தேயு 21:8 -11ல் வாசிக்கிறோம்.

HAPPY SUKKOT /  חג שמח סכו  / CHAG SAMEACH SUKKOT