எலியேசெர் அரசு பள்ளியில் பயின்ற நாட்கள் அவரது வாழ்நாளில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அச்சமயத்தில் தான் அவர் தேசியவாதம் என்னும் கருத்தை அறிந்து அதன் மீது பேரார்வம் கொண்டவரானார்.

1877 இல் ரஷ்யாBalkans / பால்கன் பிரதேசங்களின் சுயாட்சி வேண்டி Ottoman /ஆட்டோமான் பேரரசு மீது போர் தொடுத்தது. Russo – Turkish War இதுவே. இப்போரில் நாம் நம் தேசத்தில் கேட்பது போல் (மாநில சுயாட்சி) பெருங்குரலே, போர் முழக்கமாக ஒலித்தது. அது Europe / யூரோப் முழுவதும் வேகமாக பரவி World War I / முதல் உலகப் போரில் வந்து நின்றது.

இந்தச் சம்பவங்கள் எலியேசெரின் கற்பனையைத் தூண்டியது. அனைத்து பால்கன் பகுதி மக்களும் அவரவர் வாழவும், வசிக்கவும் நாடு வேண்டுவது போல், யூத இன மக்களுக்கும் தனி நாடு தேவை என்ற எண்ணம் அவருள் உதித்தது. இது குறித்து அவர் இவ்வாறு விளக்குகிறார்.

“After a number of hours of reading the papers and reflecting on the fate of the Bulgarians and their future freedom, suddenly, as if lightning struck, an incandescent light radiated before my eyes . . . and I heard a strange inner voice calling to me: “The revival of Israel and its language in the land of the forefathers!” . . . The lot was cast. My life and strength were given from that time onto the labor of reviving Israel and its tongue in the land of the fathers. “

மருத்துவம் படிப்பதற்காக 1878 இல் Paris / பரிஸ் நகரத்துக்கு செல்கிறார். அவரது இதயமோ அன்று பாலஸ்தீன் என்றழைக்கப்பட்ட அவரது தாய்நாட்டின் மீதே இருந்தது. எபிரேயம் பேச்சுமொழியாக உருவாக வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டவராகவே இருந்தார். எலியேசெரின் கனவுகள் ஆசைகள் நம்பிக்கைகள் அனைத்தையும் அவருக்கு இருந்த தொடர் இருமல் தொந்தரவு தகர்த்துப் போட்டது. காரணம் அவர் Tuberculosis / காச நோய் உடையவராக மருத்துவரால் கண்டறியப்பட்டார்.

தனக்கு காச நோய் இருப்பதை சாலமன் ஜோனஸின் மகள் டெபோராவிற்கு உடனடியாக தெரியப்படுத்தி பின் வருமாறு எழுதுகிறார்.

நான் மரண தண்டனை பெற்ற கைதியைப் போல் உணருகிறேன். அதனால் நான், நித்திரையின்றி, யூத மக்கள் தம் முன்னோர் பூமியை மீட்டடைய வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கும் கருத்துகளை விரைவாக பதிவு செய்து வருகிறேன்.

நான் முடிவு செய்து விட்டேன், நாம் சொந்த நாடும் அரசியல் அமைப்பும் பெற நமக்கு ஒரு மொழி மிக அவசியமாகிறது. அதுவே நம் மக்களை ஒன்றாக இணைக்கும். அம் மொழி எபிரேயமே. அதுவும் ரபிகளும் மற்ற சான்றோர்களும் பயன்படுத்தும் எபிரேயம் கூடாது. நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் பயன்படுத்த ஓர் எபிரேய மொழி தேவை. பல ஆண்டுகளாக வழக்கொழிந்த நிலையில் உள்ள ஒரு மொழியை உயிர்ப்பிப்பது மிகக் கடினமானது. நாட்கள் குறைவாக உள்ளது! வேலையோ மிகுதியாக உள்ளது! என்று கடிதத்தை முடிக்கிறார். கடைசி வரிகளே அவரது வாழ்நாளின் பொன்மொழியாயிற்று.

தமது அடுத்த கடிதத்தில் Ben Yehuda / பென் எஹுடா என்று கையெழுத்திடுகிறார். கூடவே ஒரு குறிப்பும் எழுதுகிறார். நான் இப்படி கையெழுத்திடுவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம், இனி இந்தப் பெயரே என் எழுத்தில் காணப்படும். என்றாவது ஒரு நாள் நான் இப்பெயரை எனதாகிக் கொள்வேன் என்று இரு பொருள்பட முடிக்கிறார்.

எலியேசெரின் தந்தையிட்ட பெயர் Leib / லீப் இது இட்டிஷ் மொழியில் Yehuda எஹுடா ஆகும், Ben Yehuda – என்றால் Son of Yehuda., எஹுடா வின் மகன் ஆகும். Yehuda ஒரு எபிரேயச் சொல் Judea யூதேயா தேசத்தின் பெயர். ஆதலால் Ben Yehuda / பென் எஹுடா என்பதின் மூலம் எலியேசெர் தம்மை யூதேயா தேசத்தின் மகன் என்று அறிவிக்கிறார். தம்மை தம் முன்னோர்கள் வாழ்ந்த தேசத்தின் மகனாகக் கருதுகிறார்.

1879 இல் 21 வயதான Ben Yehuda / பென் எஹுடாவின் கட்டுரையை வியன்னாவைச் சேர்ந்த பாரம்பரியமான பத்திரிக்கை வெளியிட்டது.

அக் கட்டுரையில் முதன் முதலாக தேசியவாதம் என்னும் பதத்திற்கு எலியேசெர் ஒரு புதிய எபிரேயச் சொல்லை உருவாக்கி பயன்படுத்த, அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆச்சாரமான யூதர்கள் பலர் தாங்கள் புனிதமாக கருதும் எபிரேய மொழியை அன்றாட நிகழ்வுக்கு, வாழ்க்கைக்கு பயன்படுத்தியதின் மூலம் தீட்டுப்படுத்திவிட்டார் என்று உக்கிரத்தோடு எதிர்த்தனர். இதற்கு பதில் தரும் வண்ணம் மீண்டும் ஒரு கட்டுரையை எழுதி பத்திரிக்கையில் வெளியிட்டார்.

எலியேசெர் 1880இல் மருத்துவர்களின் ஆலோசனைபடி தன் உடல் ஆரோக்கியத்திற்காக வட ஆப்ரிக்காவில் உள்ள அல்ஜீயர்ஸுக்கு செல்கிறார்.

அங்கு அவர் முக்கியமான மொழியியல் கண்டுபிடிப்பைச் செய்கிறார். அவர் தம் வாழ்கையில் முதன் முதலாக Sephardic Jews / செபார்டிக் யூதர்கள் பேசும் எபிரேய மொழியை கேட்கிறார்.

இவர்கள் மத்திய தரை கடல் பகுதி நிலங்களில் குடியேறிய யூதர்கள். அவர்கள் பேசும் எபிரேயம் முற்றிலும் வேறாக தமக்கு புரியாததாக இருந்தது.

எலியேசெர் பேசுவது Ashkenazi / அஷ்கெனாஸி வகையைச் சார்ந்தது. தொடர்ந்து செபார்டிக் யூதர்கள் பேசும் எபிரேய மொழியின் மீது பற்று கொண்டு அதின் உச்சரிப்பு பாணியை பயிலத் தொடங்குகிறார்.

இம்மொழியின் உச்சரிப்பு  தங்கு தடையின்றி பொங்கி வழியும் தன்மையும் இனிமையும் உடையதாய் இருந்தது. ஆதலால் எலியேசெர் இவ்வகை செபார்டிக் உச்சரிப்பே வேதாகம எபிரேய மொழியின் உச்சரிப்புக்கு நெருக்கமானதாக இருந்திருக்கும் என்று நம்பிக்கை கொண்டார். ஆகவே அன்று முதல் அவர் இதனையே விரும்பி பிறருக்கும் கற்றுக் கொடுக்கத் திடம் கொண்டார்.